Home / உலகச் செய்திகள் / யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட கூகுளின் செயலிகள் முடக்கம்!!

யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட கூகுளின் செயலிகள் முடக்கம்!!

அமெரிக்காவில் அதிக படியான பயன்பாடு காரணமாக யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட செயலிகள் சிறிது நேரம் முடங்கின.

அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளில் சில பகுதிகளிலும் யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட கூகுளின் செயலிகள் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு முடங்கின. மேலும் கூகுள் க்ளவுடினை (cloud) பயன்படுத்தும் மற்ற சில செயலிகளும் சிறிது நேரம் முடங்கின.

இதுகுறித்து தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், கிழக்கு அமெரிக்காவில் அதிக பயன்பாடு காரணமாக நிலவிய நெட்வோர்க் நெரிசலால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதே போல கடந்த ஜுன் 1ஆம் தேதி முதல் கூகுள் ப்ளே ஸ்டோரில் செயலிகளை பதிவிறக்கம் செய்யவோ, அப்டேட் செய்யவோ முடியவில்லை என உலகம் முழுவதிலும் சில பயனாளர்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அதுவும் சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி அதிகாரிகளிடம் சிக்கினர்.

பிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது அதனுள் இருந்த பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி ...

%d bloggers like this: