Home / உள்நாட்டு செய்திகள் / யா/வைத்தீஸ்வராக் கல்லூரி வரலாற்று சாதனை…!!

யா/வைத்தீஸ்வராக் கல்லூரி வரலாற்று சாதனை…!!

தேசிய மட்ட வலுதூக்கல் போட்டியில் வைத்தீஸ்வராக் கல்லூரி சார்பாக ஆறு மாணவர்கள் பங்கு பற்றி இரண்டு தங்கம், ஒரு வெள்ளி,ஒரு வெண்கலம், உள்ளடங்களாக 4 பதக்கங்களை வேட்டையாடி உள்ளனர்.

தேசிய ரீதியாக வைத்தீஸ்வராக் கல்லூரி தங்க பதக்கத்தை சுவீகரித்தது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்… ஜெசின் 270 கிலோ பளுவை தூக்கி தங்க பதக்கம் வென்றார்.

வைசாலி 150 கிலோ பளுவை தூக்கி தங்கம் வென்றார். சோபனா 168 கிலோ பளுவை தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். பிரணவன் 210 கிலோ பளுவை தூக்கி வெண்கலம் வென்றார்… ரிலக்சன் மற்றும் நிதர்சன் முறையே நான்காம் ஐந்தாம் இடத்தை பெற்றுக் கொண்டனர்… உ. வினோத்குமார் இவர்களுக்கான பயிற்சிகளை வழங்கினார்.இவர் ஜுன் மாதம் 18 திகதி இக் கல்லூரிக்கு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட இவர் குறுகிய காலத்தில் செப்டம்பர் மாதம் 7,8 திகதி கேகாலை ராஜகிரிய மகாவித்தியாலயத்தில்நடத்தப்பட்ட தேசிய ரிதீயிலான போட்டியில் மாணவர்களை சாதனை படைக்க வைத்துள்ளார்… மாணவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர் பாடசாலை சமூகத்தால் கடந்த 11 திகதி புதன்கிழமை பாடசாலையில் வைத்து கெளரவிக்கப்பட்டனர்…

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம்…!!

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் ...

%d bloggers like this: