Home / உள்நாட்டு செய்திகள் / யாழ் மாநகர கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார் பிரதமர்..!!

யாழ் மாநகர கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார் பிரதமர்..!!

2,350 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ்ப்பாண மாநகர மண்டபத்துக்கான நிரந்தரக் கட்டடத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (07) காலை அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த பிரதமர் யாழ். மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விலேயே குறித்த அடிக்கல்லை நாட்டியுள்ளார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

இந்த நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமனற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் நகர அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம்…!!

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் ...

%d bloggers like this: