Home / உள்நாட்டு செய்திகள் / யாழ். மாநகரில் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்த 15 மில்லியன் ஜப்பான் அரசு உதவி!!

யாழ். மாநகரில் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்த 15 மில்லியன் ஜப்பான் அரசு உதவி!!

மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் யாழ். மாநகரில் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான வாகனங்கள் தொடர்பிலான கோரிக்கை ஒன்றை ஜப்பான் அரசாங்கத்தின் தூதுவர்களுடான சந்திப்பில் வைத்து முன்வைத்திருந்தார்.

இந்த கோரிக்கை தொடர்பில் சுமார் 11 மாதங்களாக தொடர்ச்சியான முயற்சிகளும், பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வந்ததன.

இதன் பிரகாரம், ஜப்பான் அரசினால் கழிவு முகாமைத்துவத்தை  மேம்படுத்துவதற்காக 15 மில்லியன் பெறுமதியான உதவி திட்டத்தை யாழ். மாநகரசபைக்கு வழங்குவதற்கான உடன்படிக்கை நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

ஒப்பந்தத்தின் பிரகாரம் மாநகரசபைக்கு மீள் புதுப்பிக்கப்பட்ட நான்கு கழிவகற்றல் ட்ரக் வண்டிகள் வழங்கப்பட்டன.

ஜப்பான் அரசின் இந்த உதவித்திட்டத்தின் மூலம் யாழ். மாநகரத்தின் திண்ம கழிவகற்றல் செயற்பாடுகளை மிகவும் சிறப்பாகவும், முதல்வரின் வட்டார ரீதியான திண்ம கழிவகற்றல் செயன்முறையை உள்ளடக்கிய புதிய பொறிமுறையை அமுல்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருப்பதுடன், சுத்தமான பசுமை மாநகரத்தை உருவாக்க முடியும் என நம்பிக்கையும் பிறந்துள்ளது.

மேற்படி கைச்சாத்திடல் நிகழ்வில் ஜப்பான் தூதுவருடன், இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலயத்தின் முதன்மை செயலாளர் சேக் வரடனி Sake Waratani மற்றும் அரசியல் விவகார இரண்டாவது செயலர் Takeshi Ozaki உள்ளிட்ட குழுவினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

மன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...

%d bloggers like this: