Home / உள்நாட்டு செய்திகள் / யாழ்.மாதகல் பகுதியில் நகைகளை திருடிய நபர் கைது!!

யாழ்.மாதகல் பகுதியில் நகைகளை திருடிய நபர் கைது!!

யாழ்.மாதகல் பகுதியில் வீடொன்றை உடைத்து சுமாா் 15 பவுண் நகைகளை திருடி சென்ற திருடன் யாழ்.நகாில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் சிலவும் நிதி நிறுவனத்தில் திருடிய நகை ஒன்றை அடகு வைத்த 37 ஆயிரத்து 500 ரூபா பணமும் மீட்கப்பட்டது என பொலிஸாா் தெரிவித்துள்ளனர்.

மாதகல் நாவலர் வீதியில் அமைந்துள்ள வீடொன்று நேற்றுக் காலை வீட்டிலுள்ளவர்கள் ஆலயத்துக்குச் சென்றிருந்த போது உடைக்கப்பட்டு சுமார் 15 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இளவாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

யாழ் நகரில் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடிய ஒருவரை  யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மாதகல் பகுதியில் திருடப்பட்ட நகைகளை அடகு வைப்பதற்காக யாழ்ப்பாண நகருக்கு வந்ததாக  தெரிவித்த சந்தேகநபர், திருட்டு நகைகளின் ஒரு பகுதியை காவல்துறையினரிடம் வழங்கினார்.

அத்துடன், சுமார் ஒரு பவுண் நிறையுடைய நகையை யாழ்ப்பாணம் நகரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்துப்  37 ஆயிரத்து 500 ரூபா பணமும் பற்றுச்சீட்டும் சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் தினேஷ் கருணாநாயக்கவின்  கட்டுப்பாட்டிலுள்ள சிறப்புக் குற்றத் தடுப்புக் காவல்துறையினர் சந்தேகநபரை இளவாலைக் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை

வடக்கு மாகாண பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சினால் நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு ...

%d bloggers like this: