Home / உள்நாட்டு செய்திகள் / யாழ் பாலை­தீவு புனித அந்­தோ­னி­யார் ஆல­யத்­தின் கொடியேற்றம் இன்று ஆரம்­ப­ம்!!

யாழ் பாலை­தீவு புனித அந்­தோ­னி­யார் ஆல­யத்­தின் கொடியேற்றம் இன்று ஆரம்­ப­ம்!!

யாழ்ப்பாணம்  பாலை­தீவு புனித அந்­தோ­னி­யார் யாத்­தி­ரைத் தலத் திருவிழாவுக்­கான ஆயத்த வழி­பா­டு­கள் இன்று 20ஆம் திகதி புதன்­கி­ழமை மாலை 5 மணிக்­குக் கொடி­யேற்­றத்­து­டன் ஆரம்­ப­மா­க­வுள்­ளன.

கொடி­யேற்­றத்­தைத் தொடர்ந்து திருப்­பலி ஒப்­புக் கொடுக்­கப்­ப­டும்.
யாத்­தி­ரைத் தலத் திரு­விழா இன்று தொடக்­கம் எதிர்­வ­ரும் 23ஆம் திகதி சனிக்­கி­ழமை காலை வரை நடை­பெ­றும் என்று இந்த ஆல­யத்­தின் பரி­பா­ல­க­ராக அருட்­பணி செய்­யும் வலைப்­பாட்டு ஆல­யப் பங்­குத்­தந்தை வண பிதா எம்.ரி.அலோய் அருள்­நே­ச­கு­மார் அடி­க­ளார் அறி­வித்­துள்­ளார்.

எதிர்­வ­ரும் 21ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை மாலை 4.30 மணிக்­குப் பெரிய சிலுவைப் பாதை­யைத் தொடர்ந்து திருப்­பலி ஒப்­புக் கொடுக்­கப்­ப­டும். மறு­நாள் 22ஆம் திகதி வௌ்ளிக்­கி­ழமை மாலை 4.30 மணிக்­குத் திருச்­சி­லு­வைப் பாதை, நற்­க­ரு­ணைப் பெரு­விழாத் திருப்­ப­லி­யும் தொடர்ந்து நற்­க­ருணை ஆசீ­ரும் இடம்­பெ­றும்.

மறு­நாள் 23ஆம் திகதி சனிக்­கி­ழமை காலை 5 மணிக்கு திரு­விழா நாளின் முதல் திருப்­ப­லி­யும் காலை 6.45மணிக்கு திரு­வி­ழாத் திருப்­ப­லி­யும் ஒப்­புக் கொடுக்­கப்­ப­டும். திரு­வி­ழாத் திருப்­ப­ லியை யாழ்ப்­பாண குரு­மு­தல்­வர் அருட்தந்தை ஜெப­ரட்­ணம் அடி­க­ளார் ஒப்­புக் கொடுக்­க­வுள்­ளார்.

திரு­வி­ழாத் திருப்­ப­லி­ யைத் தொடர்ந்து திருச்­சொ­ரூ­பப் பவ­னி­யும் புனி­த­ரின் திருச் சொரூப ஆசி­ரும் இடம்­பெ­றும்.

வலைப்­பா­டு­பங்­கால் நிர்­வ­கிக்­கப்­ப­டும் இந்­தக் கடல் கடந்த யாத்­தி­ரைத் தலத்துக்கு அல்­லைப்­பிட்டி, வலைப்­பாடு, பள்­ளி­முனை, குரு­ந­கர், நாவாந்துறை, பாசை­யூர் பங்­கு­ளில் இருந்து இயந்­தி­ரப் பட­கு­கள், வள்­ளங்­கள் மூலம் வருடா வரு­டம் கத்­தோ­லிக்க மக்­கள் சென்று பங்­கு­பற்றி திரும்­பு­வர். இந்­தத் திரு­வி­ழா­வில் கலந்து கொள்­ளும் பக்­தர்­க­ளுக்­கான அடிப்­படை வசதிகளைப் பூந­க­ரிப் பிர­தேச செய­ல­க­மும், பூந­க­ரிப் பிர­தேச சபை­யும் ஏற்பாடு செய்­துள்­ளன.

திரு­வி­ழா­வில் கலந்­து­கொள்­ளச் செல்­லும் இறை­மக்­கள் அனை­வ­ரும் திருவிழாத் திருப்­ப­லி­யைத் தொடர்ந்து அன்று காலையே தமது இருப்பிடங்களுக்­குத் திரும்­பி­விட வேண்­டும் என்று யாழ்.ஆயர் அறி­வித்­தல் தந்­துள்­ள­தாக இந்த ஆல­யப் பரி­பா­ல­கர் வண.பிதா அலோய் அருள்­நே­ச­கு­மார் அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

மன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...

%d bloggers like this: