Home / உள்நாட்டு செய்திகள் / யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக நீண்ட நேரமாக நின்ற கார் ஒன்றினால் பரபரப்பு!!

யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக நீண்ட நேரமாக நின்ற கார் ஒன்றினால் பரபரப்பு!!

யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக நீண்ட நேரமாக கார் ஒன்று தரித்து நின்றமையினால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ் சென்ஜென்ஸ் கல்லூரிக்கு முன்பாக நீல நிறமுடைய கார் ஒன்று காலையில் இருந்து தரித்து நின்றுள்ளது. இதனை அவதானித்த பாடசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் கார் நின்ற இடத்திற்கு யாரையும் செல்லவிடாது பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

பின்னர் பாடசாலை நிறைவடையும் நேரம் என்ற காரணத்தினால் வழமையாக போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டு மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாடசாலை நிறைவடைந்து மாணவர்கள் வெளியேறும் தருணத்தில் இருவர் வருகை தந்தனர்.

தரித்து விடப்பட்ட கார் தங்களுடையது என கூறி காரில் எற முற்பட்டனர். ஆனால்  பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அனுமதிக்கவில்லை.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த இருவரையும் விசாரணைக்கு உட்படுத்தினர். இதன்போது தாம் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் என்றும் தாம் யாழ்ப்பாணத்துக்கு காலையில் வருகை தந்த போது விபத்து ஏற்பட்டதாகவும் அதனால் தாம் காரினை ஓரமாக நிறுத்தி விட்டு யாழ்ப்பாணத்துக்கு சென்றதாக கூறினார்கள்.

எனினும் பொலிஸார் குறித்த காரினை முழுமையாக சோதனையிட்டதுடன் காரில் வந்தவர்களை யாழ்ப பொலிஸ் நிலையம் அழைத்து சென்று  வாக்குமூலம் பெறப்பட்டது.

இந்த சம்பவத்தினால் பாடசாலை சூழலில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: