Home / உள்நாட்டு செய்திகள் / யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 66.58 சதவீத வாக்களிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 66.58 சதவீத வாக்களிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 66.58 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

இந்த எண்ணிக்கை தபால்மூல வாக்களிப்பும் சேர்த்து கணக்கிடப்பட்டதாக செயலகம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை நாடுமுழுவதும் இடம்பெற்றது.
நாடுமுழுவதும் 75 – 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலர்களாலும் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாக்களிப்பு எண்ணிக்கையுடன் தபால்மூல வாக்களிப்பு எண்ணிக்கையையும் இணைத்து 66.58 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றதாக மாவட்ட தேர்தல் செயலகம் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | ஜிந்துபிடிய பகுதியில் உள்ள 50 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின!

கொழும்பு, ஜிந்துப்பிட்டிய பகுதியில் இருந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டவர்களில் 50 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. குறித்த ...

%d bloggers like this: