Home / உள்நாட்டு செய்திகள் / யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்துக்கு அருகாமையில் மீட்கப்பட்ட வெடி பொருட்கள்

யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்துக்கு அருகாமையில் மீட்கப்பட்ட வெடி பொருட்கள்

யாழ்ப்பாணத்தில்உள்ள சிறுவர் நீதிமன்றத்துக்கு அருகாமையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் வெடி பொருட்கள் காணப்படுவதாக அதிரடி படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

குறித்த தகவலின் பிரகாரம் இரவு குறித்த பகுதிக்கு சென்ற அதிரடி படையினர் அங்கிருந்து 01 கிலோ கிராம் நிறையுடைய சி 04 ரக வெடிமருந்து பொதிகள் 7 மீட்டனர்.

மீட்கப்பட்ட வெடிபொருட்களை அதிரடி படையினர் யாழ்.பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் குறித்த வெடிமருந்து, டைனமெட் போன்ற வெடிபொருட்களை தயாரித்து மீன் பிடிக்காக பயன்படுத்தும் நோக்குடன் அங்கு கொண்டுவரப்பட்டு இருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக என பொலிஸ் நிலைய தகவல் தெரிவிக்கின்றன.

அதேவேளை குறித்த பேருந்து நிலையத்தில் 4 கிலோ கிராமுடைய ரி.என்.ரி. ரக வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 24ஆம் திகதி யாழ்.பொலிஸ் விசேட அதிரடி படையினர் மீட்டு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

 

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: