Home / உள்நாட்டு செய்திகள் / யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் பகல் திருட்டு [புகைப்படம்]

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் பகல் திருட்டு [புகைப்படம்]

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் உள்ள மணல்தறை வீதியில் கடந்த இருநாட்களாக பகல்வேளையில் முச்சக்கர வண்டியில் நடமாடிய திருடர்களால் பணம் ,நகை மற்றும் காஸ் சிலிண்டர்கள் என்பன களவாடப்பட்டுள்ளது.
மணல்தறை ஒழுங்கையில் இன்றைய தினம் பகல இரண்டு மணியளவில் வீட்டில் பலர் உள்ளே இருந்த சமயம் முச்சக்கர வண்டியில் வந்தவர்களால் குறித்த திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாக நம்ப்ப்படுகின்றது.
இவ்வாறு இடம்பெற்ற திருட்டுக்களில் ஓர் வீட்டினில் 15 ஆயிரம் ரூபா பணமும் 15 ஆயிரம் ரூபா பெறுமதியிலான கைத் தொலைபேசியும் களவாடப்பட்டுள்ளது. அதேபோன்று இரண்டாவது வீட்டினில் நுழைந்த திருடன் ஓர் கைத் தொலைபேசி மற்றும் காஸ் சிலிண்டர் என்பவற்றை களவாடிச் சென்றுள்ளான்.
இதேநேரம் மாலையில் சமையல் வேலைக்காக காஸ் அடுப்பினை இயக்கிய உரிமையாளர் நீண்டநேரம் அடுப்பியங்காத நிலையில் காஸ் சிலிண்டரை பார்வையிட்டபோதே குறித்த சிலிண்டர் களவாடப்ப ட்டிருந்தமை தெரிய வந்தது .

இவ்வாறு பகல்வேளையில் வீட்டிற்குள் நுழைந்து திருடிய கள்ளன் அந்த வீடுகளில் மறைத்து பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி கமராக்களை அவதானிக்கவில்லை அதனால் அவர் பயணம் செய்த முச்சக்கர வண்டி மற்றும் திருடனின் புகைப்படம் என்பன மிகத் தெளிவாக தெரிவதனால் வகையாக மாட்டிக்கொள்வார் என நம்ப்ப்படுகின்றது

About Radio tamizha

x

Check Also

நிஸங்க சேனாதிபதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு..!!

Avant Garde நிறுவனத்தின் தலைவர் நிஸங்க சேனாதிபதியை எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற ...

%d bloggers like this: