Home / உள்நாட்டு செய்திகள் / யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்டுள்ள- 17 கிலோ கஞ்சா!

யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்டுள்ள- 17 கிலோ கஞ்சா!

கஞ்சா கைமாற்றும் நடவடிக்கையின் போது வடமராட்சி கிழக்கு தாளையடிப் பகுதியைச் சேர்ந்த 37 வயது சந்தேக நபரையும், அவரிடமிருந்து 17 கிலோ 560 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளதாகப் யாழ்ப்பாண மாவட்டப் புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பிரதேச பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் தேடுதல் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் செம்மணி வீதிப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய ஒருவரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தினர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 17 கிலோ 560 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் வடமராட்சி கிழக்கிலிருந்து விற்பனைக்காக கஞ்சாவைக் கொண்டு வந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

About அகமுகிலன்

x

Check Also

இன்று இரவு பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

இன்று இரவு வேளையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு ...

%d bloggers like this: