Home / உள்நாட்டு செய்திகள் / யாழில் 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரம்!!

யாழில் 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரம்!!

கடந்த வாரத்தில் யாழ் நகரில் குறிப்பிட்ட தனியார் நிறுவனம் ஒன்றினால் தொலைத்தொடர்பாடல் துறையில் 5G தொழில் நுட்பத்தினை இலங்கையில் அறிமுகப்படுத்தும் நோக்குடன் சிறிய தொலைத்தொடர்பு கோபுரங்களான ஸ்மார்ட் போல் (Smart pole )பலவற்றினை நிறுவும் நடவடிக்கைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து வலைத்தளங்களிலும் மற்றும் ஊடகங்களிளும் இத்தொழில் நுட்பம் ஆனது உடல் நலத்திற்கு மிக்க கேடானது எனவும் சிட்டு குருவிகள் உட்பட பல்வேறு உயிரிகள் அழிவடையும் எனவும் பிரச்சாரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பான உண்மை நிலையினை வெளிக்கொணர்வதே இப்பதிவின் நோக்கமாகும்.

5G தொழில் நுட்பத்தினை நடைமுறைக்கு கொண்டு வருவதன் காரணம் என்ன?

தற்பொழுது உலகத்தில் மற்றும்  உள்ள பெரும்பாலான கைத்தொலைபேசி பாவனையாளர்கள் தமது ஸ்மார்ட் தொலை பேசியுடாக இணையத்தளத்தினை பாவிக்கின்றனர் இது தவிர பலர் கம்பியூட்டர், டேப் மற்றும் ஸ்மார்ட் டிவி  போன்ற சாதனங்களின் ஊடாகவும் இணையத்தளத்தினை பாவிக்கின்றனர். இதன் காரணமாக இணைய வேகம் குறைவடைந்துள்ளது. மேலும் தற்பொழுது பாவனையில் உள்ள தொழில் நுட்பத்தினால் குறைந்த நேரத்தில்  அதிக  தரவுகளை பரிமாற முடியாது, அதாவது அதிக வேகத்தில் தரவுகளை பரிமாற முடியாது. உதாரணமாக high definition (HD) வீடியோ ஒன்றினை தரவிறக்கம் செய்ய தற்பொழுது உள்ள தொழில் நுட்பத்தில் (4 LTE ) ஏறத்தாழ 10 நிமிடங்கள் செலவாகும் அதேவேளை 5G தொழில் நுட்பத்தில் ஓரிரு செக்கன்கள் போதுமானது. மேலும் எதிர்காலத்தில் பயன்பாட்டிற்கு வரவுள்ள சாரதியற்ற வாகனங்கள் போன்றவற்றிக்கும் மேலும் ஒன்லைன் மூலம் வீடியோ கேம் போன்றவற்றினை விளையாடவும்  இத்தொழில் நுட்பம் அவசியமானது. எனவேதான் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5G தொழில் நுட்பத்தினை அறிமுகப் படுத்துகின்றன.

REPORT THIS AD

 1. 5G தொழில் நுட்பத்தில் அதி சக்திவாய்ந்த கதிர்வீச்சு பயன்படுத்த படுவதால் உடல் நலத்திற்கு தீங்காக அமையுமா?

முதலில் 5G  தொழில் நுட்பத்திற்கும் தற்பொழுது பாவனையில் உள்ள 4LTE  தொழில்நுட்பத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை முதலில் பார்ப்போம். தற்பொழுது கைத்தொலைபேசிகள் 6GHz வரையிலான அதிர்வெண்ணிலேயே தொழில் படுகின்றன. அவை உண்மையிலே ரேடியோ அலைகள் ஆகும் (Radio waves ) அத்துடன் அவற்றின் அலைநீளம் 1 தொடக்கம் 10 வரையான சென்றி மீட்டர்லியே இருக்கும் . ஆனால் இந்த 5G தொழில் நுட்பத்தில் 60 GHz தொடக்கம் 300 GHz வரையான அதிர்வெண்ணில் தொலைத்தொடர்பு சாதனங்கள் தொழில்ப்படும், இங்கு அவற்றின் அலைநீளம் 1 தொடக்கம் 10 வரையான மில்லிமீட்டர்கள் ஆகும் (10 மில்லிமீட்டர் ஆனது 1 சென்டிமீட்டர் ஆகும்). 5G தொழில் நுட்பத்தில் பயன்படும் அலைகள் நுண் அலைகள் (micro waves) ஆகும். இனி இந்த அலைகளின் அதிர்வெண்ணிற்கும் அலைநீளத்திற்கும் மற்றும் அலைகள் கொண்டுள்ள சக்தியிற்கும் இடையிலான தொடர்பினை கீழ் வரும் இரு படங்கள் மூலம் விளங்கிக்கொள்வோம்.

emspectrum

image007

இதன் பிரகாரம் 5G தொழில் நுட்பத்தில் பயன்படும் நுண் அலைகள் மிகவும் சக்தி குறைந்தவை, இவற்றினால் மனித உடலை ஊடுருவ முடியாது. மேலும் இவை அயனாக்கும் கதிரியக்க தாக்கம் (non ionizing radiation) அற்றவை இதனால்  மனித தோலினால் அகத்துறிச்சப்பட்டாலும் மனித கலங்களில் மாற்றங்களினை உண்டுபண்ணாது புற்று நோய் மற்றும் குறைந்த வயதில் அதிக வயதான தோற்றம் போன்றவற்றினையும்  உண்டு பண்ணாது.

 1. 5 G தொழில் நுட்பத்திற்காக நடப்படுள்ள சிறிய தொலைக்கோபுரங்களில் ( Smart Pole) மின்சார விளக்குகள்மற்றும் CCTV கமராக்கள் பொறுத்தப்படுவது எதற்காக?

REPORT THIS AD

உண்மையில் இக்கோபுரங்கள் பல்வேறுபட்ட பயன்பாட்டிற்காக வடிவமைக்க பட்டுள்ளது. இக்கோபுரத்தின் தேவைக்கான மின்சாரம் சூரிய சக்தி மூலமே பெரும்பாலும் நிவர்த்தி செய்யப்படும். இதனை பொருத்துவது தனியார் நிறுவனம் ஒன்று என்பதால் அது தனது சமூக நல அக்கறையினை (Social Responsibility) இவ்வாறு வெளிப்படுத்துகின்றது இதன்மூலம் அவர்கள் வாடிக்கையாளரிடம் நன்மதிப்பினை பெறவும் சில சந்தர்ப்பங்களில் வரிவிலக்கு பெறவும் முற்படுவர்.

facebook_15624903597782903980296794663964.jpg

 1. இன்றும் சில நாடுகள் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் தொலைத்தொடர்பு உபகரணங்கள் உடன் நெருங்கி நீண்டகாலம் பழக வேண்டாம் என்று அறிவுறுத்தல்கள் விடுகின்றனவே?
  தற்பொழுது பாவனையில் உள்ள கைத்தொலைபேசிகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுக்க உதவும் கோபுரங்கள் யாவும் அயனாக்கம் அற்ற கதிரியக்கக்திலேயே தொழில் படுகின்றன மேலும் முக்கியமாக 5G தொழில் நுட்பமும் அயனாக்கம் அற்ற கதிரியக்கக்திலேயே தொழில் படுகின்றன இதனால் இவ்வகையான அலை வீச்சினால் மரபணுக்களில் அல்லது கலங்களில மாற்றத்தினை உண்டு பண்ண முடியாது. ஆனால் கைத்தொலை பேசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து கிட்ட தட்ட 30 வருடங்கள் தான் ஆகின்றன. இவை அனைத்தும் ஆபத்தற்ற அலைவீச்சில் செயற்பட்டாலும் நீண்ட காலப்போக்கில் அவற்றின் விளைவுகள் யாரும் அறியாததே . அதாவது நச்சியலில் ஓர் கோட்பாடு உண்டு நஞ்சு தன்மை குறைந்த பதார்த்தம் ஒன்றினை மனிதனுக்கு கொடுத்ததால் உடனடியாக மரணம் (low toxicity with high exposure) சம்பவிக்காது ஆனால் நீண்ட காலப்போக்கில் தொடர்ந்து சிறிய அளவில் கொடுத்தால் உடல் நல கேடுகள் அல்லது மரணம் நிகழலாம். இதனை கருத்தில் கொண்டே வருங்கால சந்ததியினரை பாதுகாக்கும் நோக்கில் சில நாடுகள் இதனை செய்கின்றன.
 2. 5G தொழில் நுட்பம் உலகில் ஏற்கனவே எந்த நாடுகளில் உள்ளது?
  5G தொழில் நுட்பம் தென் கொரியா போன்ற பல்வேறு நாடுகளில் ஒருசில ஆண்டுகளாக பாவனையில் உள்ளது. இது யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக பரீட்சார்த்த முறையில் செய்ய படவில்லை.

5g-map-worldtimezone.gif

 1. ஆதாரமற்ற குற்ற சாட்டுகள் தான் காரணமா?
  அறிவியல் பூர்வமாக அமையாத செய்திகள் மற்றும் ஆராய்ச்சிகள், மேலும் தனிநபர் விருப்பு வெறுப்புகள் தான் பெரும் பாலும் இவ்வாறான செய்திகளுக்கும் ஆர்ப் பாட்டகளுக்கும் காரணம். உதாரணமாக கிழே உள்ள யாழ் பத்திரிகை ஒன்றில் வந்த செய்தியினை கவனமாக வாசிக்கவும்

facebook_1562490313167927008833727626680.jpg

இங்கு யார் அந்த வைத்தியர்? அவர் எந்த துறையில் பாண்டித்தியம் பெற்றவர்? அவர் எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினார்? ஏதாவது அறிவியல் ஆதாரம்? என்று ஒன்றும் குறிப்பட வில்லை. இவை உண்மையில் பாமர மக்களை திசை திருப்பும் செயன்முறை ஆகும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பொலிஸ் உத்தியோகத்தரை காணவில்லை-திடுக்கிட வைக்கும் விசாரணை!

கடவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 14535 இலக்க பொலிஸ் உத்தியோகத்தர் காணாமற்போயுள்ளமை தொடர்பில் பேலியகொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 14535 ...

%d bloggers like this: