Home / உள்நாட்டு செய்திகள் / யாழில் புதிய வியூகம்!! திறியோ குழுவை வடக்குக்கு அனுப்பிய அரசு!

யாழில் புதிய வியூகம்!! திறியோ குழுவை வடக்குக்கு அனுப்பிய அரசு!

சிறிலங்காவின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்,ரஞ்சித் மத்தும பண்டார,அந்தத்துறையின் பிரதி அமைச்சர் நளின் பண்டார காவற்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தார்கள் அல்லவா?

வடக்கே இடம்பெற்றுவரும் வாள்வெட்டுசம்பவங்களை தடுப்பது குறித்தே இந்த குழு அங்கு சென்றதாக செய்தி சொல்லப்பட்டது.ஆனால் இந்தக்குழு அவசரமாக பயணப்பட்டதன் உண்மையான நோக்கம் வாள்வெட்டுச் சம்பவங்களை தடுப்பது குறித்தது அல்லவாம்.

மாறாக வடக்கில் தற்போது மீண்டும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான ஒரு சிந்தனையோட்டம் வெளிப்படையாக வருவதாக அரசாங்கம் கருதுவதால் அதனை ஒடுக்குவது குறித்து ஆய்வுசெய்ய இந்த“திறியோ”குழுவை வடக்குக்கு விரைவாக அனுப்பிவைத்ததாம்.

அதாவது ஒப்ரேஷன் அன்ரி-எல்ரீரி மைன்ட் செற் என்ற அடையாளத்துடன் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சிந்தனையோட்டத்தை ஒடுக்கும் வியூகத்துடன் தான் இந்த குழு தனது திட்டங்கள் குறித்து வடக்கே ஆய்வு செய்திருக்கின்றது.

இதனால் வடக்கில் வாள்வெட்டுகள் குறைத்ததோ இல்லையோ விரைவில் வடக்கில் இறுக்கமான சில நடைமுறைகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

About இனியவன்

x

Check Also

யாழ். கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டில் தங்க மோதிரம்!!

யாழ்ப்பாணம் கோட்டை உட்பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டில் இருந்து S.A எனும் எழுத்துப் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ...

%d bloggers like this: