Home / உள்நாட்டு செய்திகள் / யாழில் பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்

யாழில் பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றின், விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்தவரை வழிமறித்த கும்பல் ஒன்று, அவரை வாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளன.

இந்தச் சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கோண்டாவிலைச் சேர்ந்த பாலச்சந்திரன் மதனகரன் (வயது -43) என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகி, தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொள்ளைக் கும்பல் ஒன்றே இவ்வாறு வாளால் வெட்டிவிட்டு, அவரது மோட்டார் சைக்கிளை அபகரித்துச் சென்றுள்ளது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

 

About VITHUSHA

x

Check Also

ஊரடங்கு சட்டத்தினை மீறிய மேலும் 125 பேர் கைது!

பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ...