Home / உள்நாட்டு செய்திகள் / யாழில் நடந்த பல லட்சம் பெறுமதியான திருட்டு

யாழில் நடந்த பல லட்சம் பெறுமதியான திருட்டு

யாழ்ப்பாணம் றக்கா விதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் 37 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டதுடன் நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சீசீரிவி கமெராக்களும் நேற்று இரவு திருடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் அனைவரிடமும் யாழ். பொலிஸாரால் இன்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் றக்கா வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் 15 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடமையாற்றி வருகிறார்கள்.

நேற்று குறித்த நிறுவனத்தில் 37 இலட்சம் ரூபாய் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அங்கு இருந்த பணம் திருடப்பட்டுள்ளதுடன் நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து கமெராக்களும் களவாடப்பட்டு இருந்துள்ளது.

இன்று வேலைக்கு திரும்பியவர்கள் வழமைபோல் தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர். நிறுவனத்தின் தலைவர் இன்று குறித்த நிறுவனத்துக்கு வந்த போதே மேற்படி பணம் திருட்டு போயுள்ளதை அனைவரும் அறிந்துள்ளனர்.

உடனடியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து நிறுவனத்தின் முகாமையாளர் உட்பட பணியாளர்கள் அனைவரும் யாழ் . பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதுடன் அனைவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | ஜிந்துபிடிய பகுதியில் உள்ள 50 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின!

கொழும்பு, ஜிந்துப்பிட்டிய பகுதியில் இருந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டவர்களில் 50 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. குறித்த ...

%d bloggers like this: