Home / உள்நாட்டு செய்திகள் / யாழில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் மரநடுகை நிகழ்ச்சி

யாழில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் மரநடுகை நிகழ்ச்சி

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் மரநடுகை மாத நிகழ்ச்சி கடந்த 10.11.2018 (சனிக்கிழமை) அன்று கோலாகலமாக நிகழ்ந்தேறியது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிறப்புவிருந்தினராகவும் கலந்துகொண்டிருந்தனர்.

முதல் நிகழ்ச்சியாக, யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்தில் மரநடுகை இடம்பெற்றது.

தொடர்ந்து, நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மலர்க்கண்காட்சி திறந்துவைக்கப்பட்டு விருந்தினர் உரைகளும் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்ச்சியில் ஐம்பது மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

About இனியவன்

x

Check Also

இன்று இன்று பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ள மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். இத்தகவலை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது ட்விட்டர் ...

%d bloggers like this: