Home / உள்நாட்டு செய்திகள் / யாழில் தனிமையில் வசித்த மூதாட்டியின் வீட்டில் மூதாட்டியை அச்சுறுத்தி கொள்ளை!!

யாழில் தனிமையில் வசித்த மூதாட்டியின் வீட்டில் மூதாட்டியை அச்சுறுத்தி கொள்ளை!!

தனிமையில் வசித்த மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையா்கள் வாள் முனையில் மூதாட்டியை அச்சுறுத்தி நகைகள், பணம் மற்றும் தொலைபேசிகளைத் திருடிச் சென்றுள்ளனா்.

இந்த சம்பவம் யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது.

ஓய்வு பெற்ற அரச ஊழியரான மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், வாளைக் காட்டி மூதாட்டியை அச்சுறுத்தியதுடன், மூதாட்டியின் வாய்க்குள் துணியை அடைந்து பணம், நகை மற்றும் தொலைபேசிகளை திருடி சென்றுள்ளனா்.

அயலவர்கள் வாய்க்குள் துணி அடையப்பட்ட நிலையில் மூச்சுவிட சிரமப்பட்ட மூதாட்டியை மீட்டு வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

மரண தண்டனை தொடர்பில் மகிந்தவின் தெரிவித்துள்ள கருத்து..!!

மரண தண்டனை அவ்வாறே பேணப்படும் என்ற போதும், அது நடைமுறைப்படுத்தப்படக்கூடாது என்றும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது ...

%d bloggers like this: