Home / உள்நாட்டு செய்திகள் / யாழில் காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!!

யாழில் காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!!

மானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்கல் நடத்த சென்ற ஆவா குழுவைச் சேர்ந்தவரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

மானிப்பாய் – இணுவில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.

மற்றொருவர் படுகாயமடைந்தார். காயமடைந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

இந்தச் சம்பவம் இன்றிரவு 8.40 மணியளவில் இடம்பெற்றது. “மானிப்பாய் பொலிஸ் பிரிவு மானிப்பாய் – இணுவில் வீதியில் ஆவா குழு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்திருந்தது.

அதனால் மானிப்பாய், கோப்பாய், சுன்னாகம் மற்றும் கொடிகாமம் ஆகிய பொலிஸ் பிரிவுகள் இணைந்து ஆவா குழுவைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கை எடுத்திருந்தது.

சிறப்பு அணி மானிப்பாய் – இணுவில் வீதியில் களமிறக்கப்பட்டிருந்தது. ஆவா குழுவைச் சேர்ந்தோர் வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்களை வழிமறித்துக் கைது செய்ய பொலிஸார் முற்பட்டனர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் பயணித்ததாகவும் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களை மறிக்க முற்பட்ட போதும் அவர்கள் நிறுத்தாத நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அறிய முடிகின்றது.

இத்துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர் படுகாயமடைந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கஜேந்திர வாள் ஒன்று சம்பவ இடத்தில் மீட்கப்பட்டுள்ளது. மேலும் நால்வர் தப்பித்துள்ளனர். அவர்களைத் தேடி தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சம்பவத்தையடுத்து மானிப்பாய் பொலிஸாருடன் இணைந்து ஏனைய பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸாரும் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என பொலிஸார் தெரிவித்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: