Home / உள்நாட்டு செய்திகள் / யாழில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மின்னல் தாக்கி பலி

யாழில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மின்னல் தாக்கி பலி

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கில் இன்று நண்பகல் மின்னல் தாக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

தமது புகையிலைத் தோட்டம் ஒன்றில் நான்கு பேர்  வேலை செய்துகொண்டிருந்துள்ளனர்.

இதன்போது ஒருவர் மதிய உணவு எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஏனையோரில் ஆண் ஒருவரும் இரண்டு பெண்களும் வேலை செய்துகொண்டிருந்த போது திடீரென மழை பெய்த காரணத்தினால் அருகில் இருந்த தென்னைமரத்துக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டிலில் ஒதுங்கியுள்ளனர்.

இதன் போது இடி மின்னல் குறித்த  தென்னை மரத்தின் மீது விழுந்ததில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

உணவு எடுக்கச் சென்றவர் திரும்பி வந்த போதே மூன்று பேரும் மின்னல் தாக்கி இறந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவத்தில், திருநாவுக்கரசு கண்ணன் வயது 48 ,கந்தசாமி மைனாவதி வயது 52 மற்றும் ரவிக்குமார் சுதா வயது 38 ஆகியோரே பலியாகியுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த ...

%d bloggers like this: