Home / உள்நாட்டு செய்திகள் / யாழில் ஆலயத்திற்கு வந்தவர்களை விரட்டியடித்த குழுவினர்…

யாழில் ஆலயத்திற்கு வந்தவர்களை விரட்டியடித்த குழுவினர்…

யாழ்.தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்துக்கு வழிபட வந்தவர்களை சிறிய ரக டிப்பர் வாகனத்தில் வந்த சிலர் விரட்டியடித்துள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் சற்றே பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததாகவும் அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டிப்பர் வாகனத்தில் வந்த 3 பேர் ஆலய வளாகத்திற்குள் கண்மண் தெரியாமல் வாகனத்தை வேகமாக ஓட்டியுள்ளதாகவும், அந்த சமயம் ஆலயத்திற்கு வழிபட வந்த சிறுவன் ஒருவர் மீது வாகனத்தை மோதப் பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த சிறுவன் தெய்வாதீனமாக உயிர் தப்பிய நிலையில், இதனைக் கண்ட சிறுவனின் தந்தை வாகனத்தில் வந்தவர்களை பார்த்து பேசிய போது வாகனத்தில் வந்தவர்கள் வாகனத்தை விட்டு இறங்கி வந்து சிறுவனின் தகப்பனை மிரட்டியதுடன் இது எங்களுடைய ஏரியா எதுவும் நாங்கள் செய்வோம் எங்களை எவரும் ஒன்றுமே செய்ய முடியாது என்று எச்சரிக்கை செய்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை பார்த்த ஆலயத்துக்கு வழிபட வந்தவர்கள் அரைகுறையாக கடவுளை வழிபட்டு விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்ததாக எமது செய்தியாளர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

About இனியவன்

x

Check Also

மஸ்கெலியா நகரில் காணாமல் போன இளைஞன் நீரோடையில் சடலமாக மீட்பு!!!

மஸ்கெலியா நகரில் 19.02.2019 அன்று இரவு காணாமல் போன 30 வயதுடைய இளைஞன் இன்று காலை மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக ...

%d bloggers like this: