Home / உள்நாட்டு செய்திகள் / மோடியின் இலங்கை விஜயத்தினால் கொழும்பில் இன்று மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து!!

மோடியின் இலங்கை விஜயத்தினால் கொழும்பில் இன்று மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக பாதை மற்றும் கொழும்பை அண்மித்த வீதிகள் சிலவற்றில் இன்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்துக்கள் இடம்பெறவுள்ளன.

இன்று  முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 வரை இந்த மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்துக்கள் இடம்பெறவுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க கொழும்பு அதிவேக பாதை, பேஹலியகொடை மேம்பாலம், ஒருகொடவத்தை, தெமட்டகொட, பொரளை ஊடாக கனத்த சுற்றுவட்டம் வரையும் பேஸ்லைன் வீதியின் பொரளை, டீ.எஸ் சேனாநாயக்க சந்தி முதல் ஹோர்டன் பிரதேசம், தாமரை தடாக சுற்றுவட்டம், ஆனந்தகுமார சுவாமி மாவத்தை, பித்தளை சந்தி, யோர்க் விதி, பாரோன் ஜயதிலக்க மாவத்தை, லோட்டஸ் பாதை, ஜனாதிபதி மாவத்தை, காலி முகத்திடல், பழைய நாடாளுமன்றம் வரையும் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்துக்கள் இடம்பெறவுள்ளன.

இதனை கருத்திற் கொண்டு பயணிகள் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

தேர்தல் ஆணையாளரின் அதிரடி அறிவிப்பு

தேர்தல் பிரச்சார காலத்தினுள் விகாரையில் அல்லது புனித தலத்தில்  தேர்தல் கூட்டத்தை நடத்தினால் அந்த வேட்பாளர் வெற்றிப்பெற்றாலும் அந்த வெற்றியை ...

%d bloggers like this: