Home / இந்திய செய்திகள் / மோடிக்காகத்தான் முட்டாள் தினமே கொண்டாடப்படுகிறது

மோடிக்காகத்தான் முட்டாள் தினமே கொண்டாடப்படுகிறது

குஜராத்தில் வாத்காம் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளரும், தலித் போராளியுமான ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய பிரதமர் மோடியை குறிப்பிட்டு நகைச்சுவை தொனிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.

ஏப்ரல் 1 ஆம் தேதி – முட்டாள்கள் தினம் என அனுசரிக்கப்பட்டுவருகிற நிலையில், ஜிக்னேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “நரேந்திர மோடி இந்த முட்டாள்கள் தினத்தை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றுவிட்டார். சரியாக சொல்ல வேண்டும் என்றால், இந்த நாளே அவருக்கானதுதான். அவர் கொஞ்சம் கூட உறுத்தாமல் சொல்லும் பொய்கள் காரணமாக கண்டிப்பாக வரலாற்றில் இடம்பிடிப்பார். அவருக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பாஜக நோட்டாவை  விட குறைவான வாக்குகள் வாங்கியபோதும் ஜிக்னேஷ் பாஜகவை கிண்டல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About இனியவன்

x

Check Also

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? போலீஸ் ஆட்சியா?

சென்னை – சேலம் பசுமை வழிச் சாலையை எதிர்ப்பவர்களும் தமிழகத்தில் அரசின் திட்டங்களை எதிர்ப்பவர்களும் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுவருகின்றனர். சர்வாதிகார ஆட்சிபோல் ...

%d bloggers like this: