Home / விளையாட்டுச் செய்திகள் / மொயீன் அலி, மார்க்வுட் அபார பந்துவீச்சினால் மேற்கிந்திய தீவுகளை மிரட்டியது இங்கிலாந்து அணி!
Roston Chase (R) celebrates the dismissal of Niroshan Dickwella of Sri Lanka during day 5 of the 1st Test between West Indies and Sri Lanka at Queen's Park Oval, Port of Spain, Trinidad, on June 10, 2018. / AFP PHOTO / Randy Brooks

மொயீன் அலி, மார்க்வுட் அபார பந்துவீச்சினால் மேற்கிந்திய தீவுகளை மிரட்டியது இங்கிலாந்து அணி!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், மொயீன் அலி, மார்க்வுட் அபார பந்துவீச்சினால் மேற்கிந்திய தீவுகள் 154 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயிண்ட் லூசியாவில் நடைபெற்று வருகிறது.

இந்த நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 277 ஓட்டங்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 79 ஓட்டங்களும், ஜோ பட்லர் 67 ஓட்டங்களும் எடுத்தனர்.

தொடர்ந்தும் மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் கேமர் ரோச் 4 விக்கெட்டுகளையும், கேப்ரியல், அல்ஸாரி மற்றும் கீமோ பவுல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதனைத் தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது.

இங்கிலாந்தின் மார்க்வுட் மொயீன் அலி இருவரும் மேற்கிந்திய தீவுகளின் விக்கெட்டுகளை மாறி மாறி கைப்பற்றினர். இதனால் அந்த அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன.

ஆட்டத்தில் தொடக்க வீரர் கேம்பெல் 41 ஓட்டங்களும், டவ்ரிச் 38 ஓட்டங்களும் எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.. இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 47.2 ஓவரில் 154 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அபாரமாக பந்து வீசிய , மொயீன் அலி 4 விக்கெட்டுகளும், மார்க்வுட் 5 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அதன் பின்னர் 123 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது.

3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பர்ன்ஸ் 10 ஓட்டங்களுடனும், ஜென்னிங்ஸ் 8 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

About அகமுகிலன்

x

Check Also

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: நியூசி.அணியில் இருந்து கப்தில் விலகல்

காயம் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் விளையாட மாட்டார் என ...

%d bloggers like this: