Home / உள்நாட்டு செய்திகள் / மைத்திரியிடம் சில கேள்விகள்!

மைத்திரியிடம் சில கேள்விகள்!

மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக பதவி ஏற்றதும் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை சொண்டு வர ஐக்கிய தேசிய கட்சியும் அதன் கூட்டு கட்சிகளும் தயார் நிலையில் இருந்தன.

எனினும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோல்வியுற செய்ய தேவையான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மஹிந்த தரப்பிடம் இருக்கவில்லை.

இதன் காரணமாக ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை தமது பக்கத்துக்கு எடுக்க மஹிந்த தரப்பு கடும் முயற்சியில் இறங்கி இருந்தது.

பல உறுப்பினர்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டனர், ரணில் தரப்பில் இருந்தும் சிலர் மஹிந்த பக்கத்துக்கு தாவினர்.

அதேநேரம் , ஜனாதிபதி மைத்திரிபாலவும் சிறுபான்மை கட்சிகளை அழைத்து மஹிந்தவுக்கு ஆதரவு கொடுக்கும் படி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.

எனினும் நினைத்த அளவுக்கு மஹிந்த தரப்பின் முயற்சி கைகூடவில்லை. இதன் காரணமாக சிக்கலில் இருந்து தப்பும் பொருட்டு பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி முடிவு செய்து அதனை அறிவித்தார்.

இது தொடர்பில் நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாராளுமன்றம் கலைக்கப்பட்ட காரணங்களை பொது மக்களுக்கு வெளிப்படுத்தி உரையாற்றி இருந்தார்.

இந்த உரையில் மஹிந்த தரப்பின் பேரம் பேசல் பற்றி குறிப்பிட்ட மைத்திரிபால , பாராளுமன்ற உறுப்பினர்களின் பெறுமதி 100 மில்லியன் ரூபா முதல் 150 மில்லியன் ரூபா வரையிலும் சிலவேளைகளில் இன்னும் சில உறுப்பினர்களின் பெறுமதி 500 மில்லியன் ரூபாவாகவும் விலைபோகும் நிலைமை ஏற்பட்டது , இதன் காரணமாகவே பாராளுமன்றத்தை கலைக்க நேரிட்டது என கூறியிருந்தார்.

இந்நிலையில் , பேரம் பேசப்பட்ட பெறுமதிகள் தொடர்பில் மைத்திரிக்கு எவ்வாறு தெரியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும கேள்வியெழுப்பியுள்ளார்.

அவ்வாறு அந்த விலைகள் ஜனாதிபதிக்கு தெரியும் எனின், ஜனாதிபதியா இந்த விலைகளை நிர்ணயித்தார்? அவர் இடை தரகராக செயட்பட்டாரா என பல கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் எமது ஆசிரிய பீடம் எழுப்புகின்ற கேள்வி இது தான்.

உண்மையில் மஹிந்த தரப்பு நடத்திய பேரம் பேசல் சட்டவிரோதமான செயல் , இது குறித்து தெரிந்தும் ஜனாதிபதி என்ன நடவடிக்கை எடுத்தார்?

இவ்வளவு கோடி கணக்கில் பேரம் பேசலை நடத்தியதாக ஜனாதிபதியே உறுதி செய்துள்ள நிலையில் , மஹிந்த தரப்புக்கு இந்த பணம் எங்கிருந்து வந்தது?

அரசியல் பண பேரம் என்பது இலஞ்சம் என்பதில் அடக்கம் பெறும் நிலையில் , மைத்திரி மஹிந்த தரப்பின் இலஞ்சம் குறித்து அறிந்த நிலையில் என நடவடிக்கை எடுத்தார்?

இது தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி தயாரா ?

 

About இனியவன்

x

Check Also

குண்டுத்தாக்­கு­தலில் உயிரிழந்தோருக்கு 119.3 மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈடு!!

ஈஸ்டர் தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத குண்டுத்தாக்­கு­த­லுக்கு இலக்­கான கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு கட்­டு­வாப்­பிட்­டிய புனித செபஸ்­தியார் ...

%d bloggers like this: