Home / உலகச் செய்திகள் / மெக்சிகோ பொருட்களுக்கு  விதிக்கப்பட இருந்த வரி ரத்து!!

மெக்சிகோ பொருட்களுக்கு  விதிக்கப்பட இருந்த வரி ரத்து!!

மெக்சிகோ பொருட்களுக்கு  விதிக்கப்பட இருந்த வரி ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மெக்சிகோ எல்லை வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைபவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத விதத்தில் கடந்த மே மாதம் ஒரு லட்சத்து 26 ஆயிரமாக அதிகரித்தது.

இதையடுத்து, சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க தவறியதாக கூறி, மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்கள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 சதவீத வரி வீதம் 25 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என்றும் வரும் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் மெக்சிகோ அரசு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, இப்பிரச்சனையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க மெக்சிகோ அரசு கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, வரி விதிப்பு ரத்து செய்யப்படுவதாக டிரம்ப்  அறிவித்தார். அமெரிக்க வேளாண் பொருட்களை வாங்கவும் மெக்சிகோ ஒப்புதல் அளித்துள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வட கொரியா கொலை களம்: பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறதா?

வட கொரியாவில் பொது இடத்தில் தூக்கிலிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட 318 இடங்களை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக கூறுகிறது தென் கொரியாவில் உள்ள ஓர் ...

%d bloggers like this: