Home / உள்நாட்டு செய்திகள் / மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..!

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..!

தம்புள்ள, குருணாகல பிரதான வீதியிலுள்ள மல்சிறிபுர கொஸ்கல்ல பிரதேசத்தில் இரு பஸ்கள் மற்றும் வேன் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கொகரல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களுள் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மூவரும் உள்ளடங்குகின்றனர். காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமானதாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

கெகிராவயிலிருந்து கொழும்பு நோக்கி சுற்றுலா சென்று கொண்டிருந்த பாலர் பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ் ஒன்றும், கந்தளாயிலிருந்து நோயாளர் ஒருவரை கொழும்புக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்றும், கொழும்பு – பொலன்னறுவை நோக்கி பயணித்த பயணிகள் பஸ் ஒன்றுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

About கலைப்பிரியன்

x

Check Also

அரசாங்க மற்றும் தனியார் துறை இணைய தள உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

இலங்கையில் அரசாங்க மற்றும் தனியார் துறை இணைய தள உரிமையாளர்களுக்கு சைபர் தாக்குதல் தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சைபர் தாக்குதலுக்கு ...

%d bloggers like this: