Home / உள்நாட்டு செய்திகள் / முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் தேக்கமரக் குத்திகள்

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் தேக்கமரக் குத்திகள்

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் இருந்து மணல் ஏற்றும் டிப்பரில் மறைத்து ஏற்றப்பட்ட 25 தேக்கமரக் குத்திகளும் அதன் மேல் மணலையும் ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் செல்ல முற்பட்ட டிப்பர் ஒன்றினை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு மாவட்ட உப பொலீஸ் பரிசோதகர் திசநாயக்க தலைமையிலான குழுவினர் முறிப்பு பகுதியில் குறித்த டிப்பரினை மறித்து சோதனை செய்தபோது டிப்பரில் மணல் போடப்பட்டு மறைத்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படவிருந்த 25 தேக்கம் குத்திகளை ஏற்றி டிப்பரினை பிடித்துள்ளதுடன் சாரதியினையும் கைது செய்துள்ளார்கள். குறித்த டிப்பர் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சாரதியினை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக முல்லைத்தீவு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்

 

About அகமுகிலன்

x

Check Also

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 13ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு..!!

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்கில், மற்றுமொரு கலந்துரையாடலை இந்த வாரம் நடத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக ...

%d bloggers like this: