Home / உள்நாட்டு செய்திகள் / முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டுவெடிப்பு!

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டுவெடிப்பு!

முல்லைத்தீவு மாவடடத்தின் நந்திக்கடல் களப்பு பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

கேப்பாப்புலவு ராணுவ படைப் பிரிவின் அருகாமையில் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அறியக்கூடியதாக இருக்கின்றது

குறித்த குண்டு வெடிப்பு சத்தம் கேப்பாப்புலவு முள்ளிவாய்க்கால் இரட்டைவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது

இந்த நிலையில் இந்த குண்டுச்சத்தம் குறித்த நந்திக்கடல் களப்பு பகுதியில் தனியார் காணி ஒன்றை துப்பரவு செய்து அங்கு தீ வைத்தவேளையிலேயே அதில் இருந்தே குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது

குறித்த இடத்தில் பொலிசார் விசேட அதிரடிப்படையினர் இராணுவம் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர் இதன்போது யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என அறியமுடிகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | ஜிந்துபிடிய பகுதியில் உள்ள 50 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின!

கொழும்பு, ஜிந்துப்பிட்டிய பகுதியில் இருந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டவர்களில் 50 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. குறித்த ...

%d bloggers like this: