Home / உள்நாட்டு செய்திகள் / முல்லைத்தீவில் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரங்கள்!!

முல்லைத்தீவில் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரங்கள்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

நாட்டுக்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கேற்றலுடன் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரம், 1100 பேருக்கு காணி உறுதி பத்திரம், 13,643 குடும்பங்களுக்கு சமுர்த்தி உரித்து அனுமதி பத்திரம் என்பன வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான கயந்த கருணாதிலக, தயா கமகே, காமினி ஜயவிக்கிரம பெரேரா, வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், வடமத்திய மாகாண ஆளுனர் சரத் ஏக்கநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், எம்.ஏ.சுமந்திரன், சிவமோகன் மற்றும் அர அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: