Home / உள்நாட்டு செய்திகள் / முப்படையினரின் பாதுகாப்புடன் வற்றாப்பளை அம்மனுக்கு பொங்கல்!!

முப்படையினரின் பாதுகாப்புடன் வற்றாப்பளை அம்மனுக்கு பொங்கல்!!

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் இன்று அதிகாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு, முப்படை பாதுகாப்புகளுடன் பொங்கல் இடம்பெற்றது.

கடந்த மாதம் நாட்டில் ஏற்பட்ட தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து முப்படையினரும் ஆலயத்துக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

பொங்கல் நிகழ்வுக்கு செல்லும் அனைத்து பக்தர்களும் இராணுவத்தின் முழுமையான உடல் பரிசோதனைகளின் பின்னர் ஆலய சுற்று வளாகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: