Home / உலகச் செய்திகள் / முதியோர் காப்பகத்தில் சேர்க்க முயன்ற மகனுக்கு தாய் வழங்கிய தண்டனை

முதியோர் காப்பகத்தில் சேர்க்க முயன்ற மகனுக்கு தாய் வழங்கிய தண்டனை

அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் அன்னா மே பிளசிங்ஸ்(92). அவர் தனது மகன் மற்றும் அவரின் காதலியான மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.இவரது மகன் தனது மனைவியின் பேச்சைக் கேட்டு பிளசிங்ஸ்யை முதியோர் காப்பகத்தில் சேர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“நான் அங்கு போக மாட்டேன்” என அவர் தனது மகனிடம் மன்றாடிக் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவரது மகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிளசிங்ஸ் தனது மகனை துப்பாக்கியால் சுட்டுகொலை செய்துள்ளார். கழுத்து மற்றும் தாடைப் பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்திருந்த மகனைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தனது மகனின் 57 வயது காதலியை நோக்கி துப்பாக்கியை நீட்டியபோது அவர் தப்பியோடியுள்ளார்.

தனது தாயால் சாதாரண வாழ்க்கையை முன்னெடுப்பதில் கடினம் இருப்பதாலேயே அவரைப் பராமரிப்பில் முதியோர் காப்பகத்தில் வீடுவதற்கு மகன் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பில் மகனுடன் சண்டை ஏற்பட்டபோது அந்த மூதாட்டி தனது சட்டை பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து இரண்டு தடவைகள் சுட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்துப் பிளசிங்ஸை பொலிஸார் கைது செய்துள்ளனர். “நீ எனது உயிரை எடுத்தாய் எனவே, நான் உனது உயிரை எடுத்தேன்” எனக் குறித்த மூதாட்டியை அரிசோனாவில் உள்ள தனது வீட்டில் வைத்துக் கைது செய்யும் போது குறிப்பிட்டுள்ளார்.

About இனியவன்

x

Check Also

வட கொரியா சென்ற தென்கொரிய அதிபர்

அணு ஆயுத ஒழிப்பு பற்றிய பேச்சுவார்த்தைகளுக்காக வட கொரிய தலைநகரில் தென் மற்றும் வட கொரிய தலைவர்கள் சந்தித்துள்ளனர். இந்த ...

%d bloggers like this: