Home / உலகச் செய்திகள் / முதன் முறையாக ராணுவ விளையாட்டில் தங்கம் வென்று அசத்திய இந்தியாவின் தமிழக வீரர் ஆனந்தன்

முதன் முறையாக ராணுவ விளையாட்டில் தங்கம் வென்று அசத்திய இந்தியாவின் தமிழக வீரர் ஆனந்தன்

உகான்: உலக ராணுவ விளையாட்டில் மாற்றுத்திறனாளிகள் 100 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் தமிழக வீரர் ஆனந்தன் தங்கம் வென்றார்.

சீனாவில் உலக ராணுவத்திற்கான போட்டிகள் நடக்கின்றன. இதில் மொத்தம் 140 நாடுகளில் இருந்து 9,308 ராணுவத்தினர் பங்கேற்கின்றனர். இதில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான 100 மீ., ஓட்டம் நடந்தது. இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த ஆனந்தன் குணசேகரன் பங்கேற்றார்.

இதில் சிறப்பாக செயல்பட்ட ஆனந்தன், முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் கைப்பற்றினார். தற்போது முதன் முறையாக ராணுவ விளையாட்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். தவிர, உலக ராணுவ விளையாட்டில் இந்தியா வென்ற முதல் தங்கம் இது.

பாதிப்பு எப்படி ஏற்பட்டது

கடந்த 2005ல் ராணுவத்தில் இணைந்தார் ஆனந்தன். 2008ல் காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது, கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி, இடது முழங்காலுக்கு கீழே பாதிப்பு ஏற்பட்டது.

தென் ஆப்ரிக்காவின் மாற்றுத்திறனாளி வீரர் பிஸ்டோரியசை பார்த்து துாண்டப்பட்ட இவர், அவரைப் போல தடகளத்தில் கால்பதித்தார். 2012ல் மரக்காலுடன் 100, 200 மீ., ஓட்டத்தில் பங்கேற்றார். 2016, ஆசிய–ஓசியானா சாம்பியன்ஷிப்பில் 400 மீ.,ல் தங்கம், 200 மீ., வெள்ளி வென்ற இவர், 2017 பாரா தடகள கிராண்ட்பிரிக்சில் 400 மீ., ஓட்டத்தில் வெள்ளி கைப்பற்றினார். 2018ல் ஆசிய பாரா விளையாட்டில் வெள்ளி (400 மீ.,), வெண்கலம் (200 மீ.,) கைப்பற்றினார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி அதிகாரிகளிடம் சிக்கினர்.

பிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது அதனுள் இருந்த பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி ...

%d bloggers like this: