Home / உள்நாட்டு செய்திகள் / முடிவுக்கு வந்தது அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரின் இரு நாள் வேலை நிறுத்தம்!

முடிவுக்கு வந்தது அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரின் இரு நாள் வேலை நிறுத்தம்!

அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரின் இரு நாள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதோடு புதன்கிழமை நாடு முழுவதிலுமுள்ள அஞ்சலகங்களில் வழமையான அலுவல்கள் இடம்பெற்றதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவோடு தொடங்கிய நாடு தழுவிய இருநாள் தொழிற்சங்க நடவடிக்கையால் அஞ்சலகங்கள் செயலிழந்திருந்தன.

ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெற்றதாக அச்சங்கம் தெரிவித்தது.

12 வருடங்களாக நிகழும் அஞ்சல் சேவைப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கு,

5 வருடங்கள் கடந்த 2 ஆம் வகுப்பு நியமனங்களை உடனடியாக உறுதி செய்,

கணினி தொழிநுட்பக் கோளாறுகளைச் சீர் செய்,

ஜனவரி 10ஆம் திகதி வாக்குறுதியளித்த கெபினெட் பத்திரிகைக்கு அனுமதி வழங்கி தீர்வைப் பெற்றுக் கொடு,

2012 பொறுப்புப் பரீட்சையை (Charge Exam) நடைமுறைப்படுத்து,

பொறுப்புக் கொடுப்பனவை (In charge Duty Allowance) உடனடியாக வழங்கு,

விரிவுரையாளர் சம்பளத்தை புதிய சம்பளத்துக்கு பெற்றுக் கொடு,

பொறுப்புப் பரீட்சையில் சித்தியடைந்த 1 ஆம் வகுப்பு உத்தியொகத்தர்களுக்கு எம்.என். (MN) 7 வேதன மட்டத்தைப் பெற்றுக் கொடு ஆகிய கோரிக்கைகளை முன் வைத்தே இந்தப் போராட்டம் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரின் வேலை நிறுத்தத்தால் நாட்டின் அஞ்சல் சேவை ஸ்தம்பித்திருந்ததால் அஞ்சலகங்கள் மூலமாக அலுவல்களை முடித்துக் கொள்வோர் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இதேவேளை, தபால் திணைக்கள சேவை தொடர்பான யாப்பை மறுசீரமைத்து நடைமுறைப்படுத்தாமை தபால் திணைக்களத்தில் நீண்டகாலமாக நிலவும் வெற்றிடங்கள் நிரப்பப்படாமை போன்ற இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து ஒருங்கிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் கூட்மைப்பும் ஜூன் 12 ஆம் திகதி தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

About இனியவன்

x

Check Also

பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள போதநாயகியின் கடைசி வரிகள்!!

காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரும், ஈழத்து கவிஞர் வன்னியூர் செந்தூரனின் ...

%d bloggers like this: