Home / ஆரோக்கியம் / முகப்பருக்களை விரட்ட மிக சிறந்த வழிமுறைகள்

முகப்பருக்களை விரட்ட மிக சிறந்த வழிமுறைகள்

பொதுவாக அனைவரும் சந்திக்க கூடிய முகப்பிரச்சினைகளில் ஒன்று தான் முகப்பரு.

இது முகத்தில் வந்தாலே பலர் கைகளினால் கிள்ளுவதுண்டு. இதனால் முகப்பரு வந்த இடங்கள் கருமையான வடுவாக மாறிவிடுகின்றது.

இந்த பருக்களை விரட்ட நிறைய அழகு சாதனப் பொருட்கள் கடைகளில் கிடைத்தாலும் நம் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது தான் சிறந்தது. அவை என்ன என்பதை பார்ப்போம்.

பப்பாளி மற்றும் லெமன் ஜூஸ்

அரை பப்பாளி பழத்தை எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதை நன்றாக கெட்டியாக அரைக்கவும். இந்த பப்பாளி பேஸ்ட்டுடன் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதை ஒரு வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்

க்ரீன் டீ மற்றும் தேன்

க்ரீன் டீ பேக்கை வெட்டி அதிலுள்ள பொடியை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். அதை ஒரு பெளலில் எடுத்து 1-2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். முகத்தை நன்றாகக் கழுவி விட்டு இந்த பேஸ்ட்டை அப்ளே செய்து 5-10 நிமிடங்கள் இருங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

பாதாம் மற்றும் தேன்

10-15 பாதாம் பருப்பை எடுத்து சில மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊற வைத்த பாதாம் பருப்பை மிக்சியில் போட்டு அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்து 20 நிமிடங்கள் காய விடவும். பிறகு சாதாரண நீரில் கழுவவும். நல்ல முகம் பிரகாசமாக இருக்கும்.

கற்றாழை ஜெல் மற்றும் க்ரீன் டீ

2-4 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ பொடியை சேருங்கள். நன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வரை வைக்கவும். இதை தினமும் பயன்படுத்தும் போது நல்ல தீர்வு கிடைக்கும்.

கற்றாழை ஜெல் மற்றும் லெமன் ஜூஸ்

ஒரு பெளலில் லெமன் ஜூஸ் மற்றும் கற்றாழை ஜெல்லை சேர்த்து கொள்ளுங்கள். இப்பொழுது இந்த கலவையை முகத்தில் அப்ளே செய்து 20-30 நிமிடங்கள் வைத்திருங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு 3-4 தடவை செய்து வந்தால் சீக்கிரமே உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி விடும்.

பேக்கிங் சோடா மற்றும் தேங்காய் எண்ணெய்

1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இந்த இரண்டும் சேர்ந்து ஒரு ஸ்க்ரப் மாதிரி செயல்படுகிறது. இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் அப்ளே செய்து மெதுவாக தேயுங்கள். 2-3 நிமிடங்கள் மசாஜ் செய்தால் போதுமானது. 15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படியே செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் குறைய ஆரம்பித்து விடும்.

ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் தேன்

ஒரு பெளலில் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து விடுங்கள். பிறகு 15-20 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தாலே நீங்கள் பருக்களற்ற முகத்தை பெறலாம்.

முட்டையின் வெள்ளை கரு மற்றும் லெமன்

ஒரு பெளலில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து அதனுடன் லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளுங்கள். நன்றாக அடித்து கலந்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். ஓரிரு நாட்களில் பருக்களின் வீரியம் குறைந்து மறைந்து விடும்.

 

About அகமுகிலன்

x

Check Also

வறண்ட சருமத்தை பளபளப்பாக மாற்ற சாக்லேட் மாஸ்க்

வறண்ட சருமத்தை பளபளப்பாக மாற்ற சாக்லேட் மாஸ்க் சாக்லேட்டில் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் இருப்பதால் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் மற்றும் வைட்டமின்களை ...

%d bloggers like this: