Home / சினிமா செய்திகள் / `மீண்டும் என் மக்களைச் சந்திக்க வருகிறேன்!’ – பிக்பாஸ் 2 டீசர்

`மீண்டும் என் மக்களைச் சந்திக்க வருகிறேன்!’ – பிக்பாஸ் 2 டீசர்

நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் 2 டீசரை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

`பிக்பாஸ்’. கடந்தாண்டு தமிழ்த் தொலைக்காட்சி உலகில் அதிகம் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி. ஷோ தொடங்குவதற்க்கு முன் ஆங்கர் யார், பங்கேற்பவர்கள் யார் என பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. யாரும் எதிர்பாராத ஆங்கராக நடிகர் கமல்ஹாசன் களமிறங்கினார்.

`பங்கேற்பவர்கள்’ என  சமூக வலைதளங்கள் பல பட்டியல்களை வெளியிட்டன, கடைசியில் விஜய் டிவி அதிகாரபூர்வ லிஸ்டை வெளியிட்டது. ஓவியா, வையாபுரி உள்ளிட்ட சினிமாவில் வாய்ப்பில்லாதவர்களே அதிகம் இடம்பிடித்திருந்தனர். ஆனாலும் ஷோ பிக் அப் ஆகி, `ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, `ஓவியா ஆர்மி’, `ட்ரிகர் பண்றாங்க’, `நீங்க ஷட் அப் பண்ணுங்க’, `முட்டை எப்படிடா காணாமப் போச்சு’ போன்ற வார்த்தைகள் வைரலாகின.  ஹிட் ஆன ஷோ என்றால் வெர்ஷன் 2 வேண்டாமா? இதோ `பிக்பாஸ் 2’ தயாராகி விட்டது.

ஜூன் இரண்டாவது வாரத்தில் ஷோ தொடங்கப்படவிருக்கிற நிலையில் அதற்கான டீசர் நேற்று வெளியாகியுள்ளது. கமல்ஹாசனே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுருக்கிறார். இரண்டாவது சீசனுக்கும் தொகுப்பாளர் கமல்ஹாசனே. போட்டியாளர்களும் தேர்வாகி விட்டதாகவே தெரிகிறது.

About இனியவன்

x

Check Also

கந்துவட்டிக்காரர்களுக்கும் தனக்கு எந்தத் தொடர்பும் எனக்கு இல்லை நகைச்சுவை நடிகர் கருணாகரன்!

பொதுநலன் கருதி திரைப்பட இயக்குனர், இணை தயாரிப்பாளர் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து தன்னிலை விளக்கம் கொடுத்துள்ள நகைச்சுவை நடிகர் கருணாகரன், ...

%d bloggers like this: