Home / சினிமா செய்திகள் / மீண்டும் இரட்டை வேடத்தில் அசத்த வரும் தனுஷ்.!

மீண்டும் இரட்டை வேடத்தில் அசத்த வரும் தனுஷ்.!

தொடர்ந்து இரண்டு படங்களில் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான ‘கொடி’ படம் தான் தனுஷ் முதன் முதலாக இரண்டு வேடங்களில் நடித்த முதல் படம்.

2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், அண்ணன் – தம்பி என இரண்டு வேடங்களில் நடித்தார் தனுஷ். த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் இருவரும் ஹீரோயின்களாக நடித்தனர். ஆனால், இந்தப் படம் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், 3 வருடங்களுக்குப் பின்னர் மறுபடியும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ். இந்தப் படத்தையும் துரை செந்தில்குமாரே இயக்கி வருகிறார்.

இதில், அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ். அப்பா தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடிக்க, மகன் தனுஷுக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

வெற்றி மாறன் இயக்கி வரும் ‘அசுரன்’ படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ் என செய்தி வெளியாகியுள்ளது. இதிலும் அப்பா – மகனாக நடிக்கிறார் தனுஷ். 45 வயதான அப்பா தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து ‘அசுரன்’ படம் எடுக்கப்பட்டு வருகிறது. பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென், பவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | விமா­னத்தில் பறந்­து ­கொண்டே நடு­வானில் வெளியிடப்பட்ட ‘சூரரைப் போற்று’ படத்தின் பாடல்

சூரரைப் போற்று திரைப்­ப­டத்தின் பாடல் வானில் பறந்த விமா­ன­மொன்றில் நேற்று வெளியிடப்பட்­டது. ஸ்பைஸ்ஜெட் நிறு­வ­னத்தின் போயிங் 737 ரக விமா­ன­மொன்று ...

%d bloggers like this: