Home / உள்நாட்டு செய்திகள் / மீசாலையில் முன்னாள் போராளி மீதும் மகன் மீதும் இனம் தெரியாத நபர்கள் வாள்வெட்டு

மீசாலையில் முன்னாள் போராளி மீதும் மகன் மீதும் இனம் தெரியாத நபர்கள் வாள்வெட்டு

மீசாலை வடக்கு இராமாவில் முகாம் வீதியில் வசித்து வரும் முன்னாள்  போராளி இ.ம. அன்பரசன் (செல்வராசா) அவர்களின் வீட்டு வாசலில் கடந்த சனிக்கிழமை இரவு 10.45 மணியளவில் இனம் தெரியாத நபர்கள் தமது மோட்டார் சைக்கிள் பழுதடைந்து விட்டது என உதவிக்கு அழைப்பது போல் அழைத்து கொட்டன்களினாலும் தடிகளினாலும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மனைவி கதறியழுத சத்தம் கேட்டு தந்தையை காப்பாற்ற வந்த அவரது மகன் செல்வரஜீபனை வாள்களால் வெட்டி விட்டு அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் காயமடைந்தவர்கள் சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புனர்வாழ்வு பெற்று வந்து மிகவும் அமைதியாக வாழ்ந்து வரும் இவர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் உரியவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் விசனம்  தெரிவித்துள்ளனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

படைப்புழுவை கட்டுப்படுத்த மன்­னார் மாவட்டத்­தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

மன்­னார் மாவட்டத்­தில் படைப்­பு­ழு­வைக் கட்­டுப்­ப­டுத்­து­தல் தொடர்­பான கருத்­த­ரங்கு  மாவட்ட செய­ல­கத்­தின் கேட்­போர் கூடத்­தில் மாவட்ட செய­லர் சி.ஏ. மோகன்­றாஸ் தலை­மை­யில் ...

%d bloggers like this: