Home / உள்நாட்டு செய்திகள் / மின்சார சபை விடுத்துள்ள அவசர வேண்டுகோள்..!!

மின்சார சபை விடுத்துள்ள அவசர வேண்டுகோள்..!!

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையின் காரணமாக மின்சார பாவனையில் சிக்கனத்தை பேணுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மின் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக, மின் உற்பத்தி செய்யப்படும் நீர்தேக்கங்களில் நீரின் அளவு குறைந்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் ஒக்டோபர் மற்றம் நவம்பர் மாதங்களில் குறித்த பகுதிகளுக்கு மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வட, வட மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது மணிக்கு 50 முதல் 60 கி.மீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் வீசக்கூடிய காற்றின் தன்மையிலும் மாற்றத்தை எதிர்பார்க்கலாமென குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

 

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | நாடுமுழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுதினமும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் ...