Home / உள்நாட்டு செய்திகள் / மின்சாரத்துறை அமைச்சு எடுக்கவுள்ள நடவடிக்கை!

மின்சாரத்துறை அமைச்சு எடுக்கவுள்ள நடவடிக்கை!

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் கடந்த வருடம் மின்சாரம் பெற்றுக் கொண்ட 2500 பேருக்கு எதிராக மின்சாரத்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணை பிரிவு ஊடாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மின்மானியை மாற்றிய 2 ஆயிரத்து 269 பேரும், சட்டவிரோத இணைப்பு மூலம் மின்சாரத்தினை 253 பேரும்  பெற்றுள்ளதாக மின்சாரதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை பெற்றுக் கொள்ளும் நபர்கள் தொடர்பில் மின்சார சபையின் 1901 மற்றும் 1987   எனும் இலக்கங்களுக்கு தகவல் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

About அகமுகிலன்

x

Check Also

இன்று இரவு பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

இன்று இரவு வேளையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு ...

%d bloggers like this: