Home / உலகச் செய்திகள் / மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 23-வது முறையாக ஏறி உலக சாதனை!!

மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 23-வது முறையாக ஏறி உலக சாதனை!!

உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 23-வது முறையாக ஏறி 49 வயதான நேபாள நாட்டவர் கமி ரிதா ஷெர்பா உலக சாதனை படைத்துள்ளார்.

ஏற்கனவே 22 முறை ஏறி ஷெர்பா உலக சாதனை படைத்திருந்த நிலையில் தன்னுடைய சாதனையை தானே முறியடித்துள்ளார்.

8,850 மீட்டர் உயரம் கொண்டது எவரெஸ்ட் சிகரம். உலகிலேயே மிக உயரமான சிகரமாக கருதப்படுகிறது. இந்த சிகரத்தில் மலையேற்றத்துக்கு இரு பாதைகள் உள்ளன. ஒன்று, நேபாளம் வழியாகச் செல்வது, மற்றொன்று திபெத் வழியாகச் செல்வது.

ஆண்டுதோறும் மலையேற்ற வீரர்கள் ஏராளமானோர் மார்ச் முதல் மே மாதம் வரை எவரெஸ்ட் சிகர்தில் ஏறும் சாதனையைச் செய்கிறர்கள். இதற்காக நேபாள அரசிடம் முறையாகப்பதிவு செய்து, கட்டணம் செலுத்தி மலைஏற்றத்தில் ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டு 378 மலை ஏற்ற வீரர்களுக்கு நேபாள அரசு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், நேபாள நாட்டின் சோளுகும்பு மாவட்டத்தில் உள்ள தாமே கிராமத்தைச் சேர்ந்த கிமி ரிதா ஷெர்பா(வயது49) என்பவர் எவரெஸ்ட் சிகரத்தில் 8 பேர் கொண்ட குழுவுடன் ஏறினார். ஏற்கனவே 22-முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி அதிகமானமுறை சிகரத்தில் ஏறிய வீரர் எனும் உலக சாதனை படைத்திருந்தநிலையில் மீண்டும் நேபாள வழியாக ஏறி முயற்சித்தார்.

இதில் வெற்றி அடைந்த ஷெர்பா நேற்று மாலை எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து 23-வது முறையாக சிகரத்தில் ஏறிய வீரர் எனும் உலக சாதனையை படைத்தார்.

இது குறித்து இமாலயா டைம்ஸ் நாளேட்டுக்கு செவன் சமிட் டிரக் நிறுவனத்தின் தலைவர் மிங்கமா ஷெர்பா அளித்த பேட்டியில் கூறுகையில், ” சோளுகும்பு மாவட்டம், தாமே கிராமத்தைச் சேர்ந்த கமி ரிதா ஷெர்பா 23-வது முறையாக எவெரஸ்ட் சிகரத்தை நேற்று மாலை அடைந்தார். நேபாள வழியாக செல்லும் பாதையை ஷெர்பா தேர்வு செய்து ஏறி, உலக சாதனையை படைத்துள்ளார்.

கடந்த 1994-ம் ஆண்டில் இருந்து ஷெர்பா எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வருகிறார். கடந்த 1995-ம் ஆண்டில் இவர் உடல்நிலை சரியில்லாததால் சிகரத்தில் ஏறவில்லை. 2017-ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் 21 முறை ஏறிய வீரர்களான அபா ஷெர்பா, புர்பா தஷி ஷெர்பா ஆகியோரோடு ரிதா ஷெர்பாவும் இணைந்தார். அவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற நிலையில், இப்போது 23-வது முறையாக ரிதா ஷெர்பா சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்துள்ளார் ” எனத் தெரிவித்தார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

டோக்கியோ நகரில் நிலநடுக்கம்!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு முறைப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள நிலையில், அவரது வருகைக்கு சற்று முன்பு டோக்கியோ நகரில் நிலநடுக்கம் ...

%d bloggers like this: