Home / உலகச் செய்திகள் / மாநாட்டு மையத்தில் பயங்கர தீவிபத்து-மக்களுக்கு தடை..!!

மாநாட்டு மையத்தில் பயங்கர தீவிபத்து-மக்களுக்கு தடை..!!

நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாட்டு மையத்தில், இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில், புதிதாக மாநாட்டு மையம் ஒன்று, ஸ்கை சிட்டி டவர் அருகே கட்டப்பட்டு வருகிறது.

இன்று காலை கட்டிடத்தில் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென தீப்பற்றி, மேற்கூரை வழியாக கரும்புகை வெளியேறியது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், பணியாட்கள் உள்பட சுமார் நூற்றுக்கணக்கான மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றி, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் கரும்புகை மூட்டம் நிலவுவதால் அவ்வழியே செல்லவும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்ட ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர் ஒருவர் விட்டு சென்ற Blow torch எரிந்து கட்டிடம் தீப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

 

About இனியவன்

x

Check Also

பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி அதிகாரிகளிடம் சிக்கினர்.

பிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது அதனுள் இருந்த பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி ...

%d bloggers like this: