Home / உலகச் செய்திகள் / மாணவ, மாணவிகள் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து பாடம் படிக்க தடை…!!

மாணவ, மாணவிகள் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து பாடம் படிக்க தடை…!!

பாகிஸ்தானின் பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்களும், மாணவிகளும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து பாடம் படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள பஹாரியா பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண், பெண் என இருபாலரும் தனித்தனியே அமர்ந்து பாடம் படிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இருவரும் சேர்ந்து உட்காருவதற்கு தடை விதிக்கப்படுவதாக கூறியுள்ள அவர், வகுப்பறைகள் இல்லாத நேரத்தில் மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றுவதோ, ஒரு கட்டடத்தில் இருந்து மற்றொரு கட்டடத்திற்கு செல்வதோ கூடாது எனவும் கட்டளையிட்டுள்ளதாக ஜியோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் வகுப்புகளுக்கு இடையில் மாணவர்களுக்கு கிடைக்கும் இடைவெளிகளை ரத்து செய்யவும் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பச்சை குத்திய மகள்

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பெண் ஒருவர் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசிக்கும் யுவெட்டே எனும் ...

%d bloggers like this: