Home / உள்நாட்டு செய்திகள் / மலையக இளைஞர்கள் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம்!

மலையக இளைஞர்கள் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்த கோரி, மலையக இளைஞர்கள் அமைப்பினால் இன்றைய தினம் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

டிக்கோயா இன்வெரி தோட்டத்தில் இந்த கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மலையகத்தின் அனைத்துப் பிரதான நகரங்களிலும், தோட்டங்களிலும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

மேலும் சேகரிக்கப்படும் இந்த கையெழுத்துக்களை மனுவுடன் இணைத்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

 

About அகமுகிலன்

x

Check Also

வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு!!

வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாருடன் இணைந்து ...

%d bloggers like this: