Home / விளையாட்டுச் செய்திகள் / மலிங்கா குறிவைத்து பந்துவீசினார்.. நாங்கள் தோற்க வேண்டியதாகிவிட்டது! சென்னை வீரர் தாகூர் வருத்தம்

மலிங்கா குறிவைத்து பந்துவீசினார்.. நாங்கள் தோற்க வேண்டியதாகிவிட்டது! சென்னை வீரர் தாகூர் வருத்தம்

ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில், கடைசி பந்தில் ரன் அடிக்க முடியாமல் போனது குறித்து சென்னை அணி வீரர் ஷர்துல் தாகூர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து கோப்பையை தவறவிட்டது. போட்டியின் கடைசி இரண்டு பந்தில் 4 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய தருணத்தில், வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் களமிறங்கினார்.

 

அவர் முதல் பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்தார். அதன் பின்னர் கடைசி பந்தை அவரே எதிர்கொள்ள வேண்டிய நிலையில், உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், மலிங்கா வீசிய அந்த பந்தில் ஷர்துல் தாகூர் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

இதனால் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அனுபவ வீரர் ஹர்பஜன் சிங் இருக்கும்போது தாகூரை களமிறங்கியதும், அவரால் வெற்றிக்கான ரன்னை எடுக்க முடியாததும் பெரும் சர்ச்சையையும், விவாதங்களையும் ஏற்படுத்தியது.

BCCI

இந்நிலையில் கடைசி பந்தில் ரன் எடுக்க முடியாதது குறித்து ஷர்துல் தாகூர் கூறுகையில், ‘பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் சென்றபோது, போட்டியை வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டும்தான் என்னுடைய மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

போட்டி நடந்த ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம் மிகப்பெரியது. பந்து எல்லைக் கோட்டுக்கு அருகில் சென்றால் இரண்டு ஓட்டங்கள் எடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஸ்டம்பை குறிவைத்து மலிங்கா பந்து வீசிக் கொண்டிருந்தார்.

 

அவர் யார்க்கர் வீசும் போது அது கொஞ்சம் தவறினால் கூட, ஸ்கொயர் லெக் திசையில் அடித்து விடலாம் என்று நினைத்தேன். அதேபோல், முதல் பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தேன். எதிர்முனையில் நின்றுகொண்டிருந்த ஜடேஜா பந்தினை தூக்கி அடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறினார்.

கடைசி பந்தினை எல்லைக் கோட்டை நோக்கி அடித்துவிட்டு ரன் ஓட வேண்டும் என்றுதான் திட்டமிட்டேன். பந்தினை தொட்டுவிட்டால் எப்படியும் எளிதில் ஒரு ரன் ஓடியிருக்கலாம் என நினைத்தேன். இடது காலினை நகர்த்தி, பெரிய ஷாட் அடித்திருக்க வேண்டும். சிக்சர் அடிக்கும் திறமை எனக்கு உள்ளது.

பதற்றமான அந்தத் தருணத்தில் யாராவது ஒருவர் தோற்கத்தான் வேண்டும். யாரேனும் ஒருவர் வெற்றி பெற வேண்டும். எதிர்பாராதவிதமாக நாங்கள் தோற்க வேண்டியதாகிவிட்டது. நான் இறங்கி winning ஷாட் அடிக்க வேண்டிய நாள் வரும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. பந்து என்னுடைய பேடில் அடித்தபோது, நான் ரன் ஓட தொடங்கினேன்.

 

நடுவரை கவனிக்கவே இல்லை. ஹீரோ ஆகியிருக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், கிரிக்கெட் இத்தோடு முடிவதில்லை. அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும்போது சரியாக பயன்படுத்திக் கொள்வேன்’ என தெரிவித்துள்ளார்.

About இனியவன்

x

Check Also

மறக்கமுடியாத உலகக் கிண்ண சர்ச்சைகள்: ஒருபந்தில் 22 ஓட்டங்கள்

எந்த ஒரு போட்டித்தொடர் முடிவடையும் போதும் இதில் சில சலசலப்புகள், சர்ச்சைகள் இருப்பது இயல்புதான். அதில் ஐசிசி நடத்திய உலகக்கிண்ணப் ...

%d bloggers like this: