Home / உள்நாட்டு செய்திகள் / மருந்து வழங்குநரின் இடமாற்றத்தை கண்டித்து மக்கள் போராட்டம்..!!

மருந்து வழங்குநரின் இடமாற்றத்தை கண்டித்து மக்கள் போராட்டம்..!!

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட உயிலங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் கடமையாற்றிய மருந்து வழங்குநர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து அப்பிரதேச மக்கள் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு முன்னால் இன்று (07) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு இன்று வரை நிரந்தர வைத்தியர் இல்லை. இந்த நிலையில் குறித்த சுகாதார பராமரிப்பு நிலையத்தில் கடமையாற்றி வந்த மருந்து வழங்குநர் திடீர் என இடமாற்றம் பெற்றுள்ளார். பதில் கடமைக்கு ஒரு மருந்து வழங்குநர் நியமிக்கப்படாத நிலையில் இடமாற்றம் வழங்கப்பட்டமையினை மக்கள் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக உயிலங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு நிரந்தரமான வைத்தியர் ஒருவரையும், மருந்தாளர் ஒருவரையும் நியமிக்க வேண்டும் எனக்கோரி குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: