Home / உள்நாட்டு செய்திகள் / மருந்து வகைகளின் விலைகள் தொடர்பாக அமைச்சர் விடுத்துள்ள முக்கிய விடயம்!!

மருந்து வகைகளின் விலைகள் தொடர்பாக அமைச்சர் விடுத்துள்ள முக்கிய விடயம்!!

சந்தையிலுள்ள மருந்து வகைகளின் விலைகளை பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கை இறுதிக்கட்டதை அடைந்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் விலை கட்டுப்பாட்டுக்கு குழு இப்பணியில் ஈடுபட்டு வருகிறது. அரசாங்கம் இதுவரை 73 மருந்து வகைகளின் விலைகளை ஒழுங்குறுத்தியிருக்கின்றமை குறிப்பிடதக்கது.

இதற்கமைய, புற்றுநோயாளர்கள் பயன்படுத்தும் 95 சதவீதமான மருந்துகளை அரசாங்கம் கொள்வனவு செய்கிறது. புற்றுநோய் மருந்துகளுக்கான விலை மனுக்கோரலின் போது சமர்ப்பிக்கக் கூடிய உயர்ந்தபட்ச விலை 95 ரூபாவாகும் என்ற சுற்றுநிரூபத்தையும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

மேலும் 27 மருந்து வகைகளின் விலைகளும் ஒழுங்குறுத்தப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்குறுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்!!

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் அடங்குவதாக ...

%d bloggers like this: