Home / இந்திய செய்திகள் / மரணப்படுக்கையில் நர்சிடம் நக்கலடித்த கருணாநிதி! 

மரணப்படுக்கையில் நர்சிடம் நக்கலடித்த கருணாநிதி! 

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.

சகாப்தம் முடிந்துவிட்டது, சூரியன் அஸ்தமனமாகிவிட்டது என்று அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், அவர் மருத்துவமனையில் இருக்கும் போது நடைபெற்ற சுவாரஷ்ய சம்பவம் ஒன்று ஊடகங்களில் தீயாய் பரவி வருகின்றது.

மருத்துவமனையில் தாதியர் ஒருவர் உடல்நிலை குறித்து பார்வையிட்டு கொண்டிருக்கும் போது , ஐயா சற்று மூச்சை இழுத்து விடுங்கள் என்று தாதியர் கூறியுள்ளார்.

அதற்கு மூச்சை விட்டு விடக் கூடாது என்று தானே மருத்துவ மனைக்கு வந்தேன் . நீங்களே எடுத்து விட சொல்கிறீர்கள் என்று புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அங்கிருந்த அனைவரும் புன்னகைத்துள்ளனர். இதேவேளை இன்று மாலை அவரின் மரண செய்தி வெளியான பின்னர் அவரின் வரலாற்று சுவாரஷ்யங்களும் வெளிவரத்துடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இனியவன்

x

Check Also

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு காந்தி நினைவிடத்தில் மோடி, தலைவர்கள் மரியாதை

புதுடில்லி : மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை ...

%d bloggers like this: