Home / உள்நாட்டு செய்திகள் / மன்னார் – வவுனியா வீதியில் விபத்து

மன்னார் – வவுனியா வீதியில் விபத்து

மன்னார் – வவுனியா பிரதான வீதியில் பிரமனாயங்குளம் பகுதியில் பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.,

இன்று ( 01.04.2018) மாலை 4.00 மணியளவில் மன்னாரில் இருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை மீறி மின்கம்பத்தில் மோதி காட்டுப்பகுதியை நோக்கி 50 மீற்றர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு விபத்துக்குள்ளாகி உள்ளது

குறித்த விபத்தில் குறித்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிறுகாயங்களுடன் தப்பியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About இனியவன்

x

Check Also

விசேட ரயில் சேவைகள்

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் இடம்பெறும் என்று இலங்கை ரயில்வே சேவைகள் பிரிவைச் சேர்ந்த மேலதிக ...

%d bloggers like this: