Home / உள்நாட்டு செய்திகள் / மன்னார் மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு அறிக்கை 8 ஆம் திகதி வெளிவரும் சமிந்த ராஜபக்ஸ!

மன்னார் மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு அறிக்கை 8 ஆம் திகதி வெளிவரும் சமிந்த ராஜபக்ஸ!

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறித்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளிவருமென அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இன்று புதன் கிழமை (06) 139 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

குறித்த வளாகத்தில் இருந்து 312 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவற்றில் 297 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 26 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு அறிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை 8 ஆம் திகதி வெளிவரும் என அவர் தெரிவித்துள்ளார்.

மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு 6 பொதிகள் செய்யப்பட்டு கடந்த 23 ஆம் திகதி கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு மறு நாள் 24 ஆம் திகதி விமானம் மூலம் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு புளோரிடாவில் உள்ள கூடத்திற்கு கார்பன் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

About அகமுகிலன்

x

Check Also

குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை

நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...

%d bloggers like this: