Home / உலகச் செய்திகள் / மனித முகம் கொண்ட மீன்-வைரலாக பரவி வருகின்ற வீடியோ..!!

மனித முகம் கொண்ட மீன்-வைரலாக பரவி வருகின்ற வீடியோ..!!

சீனாவில் மனித முகம் கொண்ட மீன் ஒன்று நீர்நிலையில் காணப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

மியோ கிராமத்தில் (Miao Village ) உள்ள நீர் நிலை அருகே பெண் ஒருவர் அமர்ந்திருந்தபோது, தண்ணீரில் நீளமான மீன் ஒன்று கரையை நோக்கி நீந்தி வந்ததை கண்டார்.

கரையை நோக்கி வந்த அந்த மீனுக்கு, கண்கள், மூக்கு மற்றும் வாய் மனிதர்களை போன்ற தோற்றத்தில் இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார்.

இதையடுத்து அந்த அதிசய மீனை, தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வெய்போ வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார். 12 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ, தற்போது அனைத்து சமூகவலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

இதேபோல் நார்வேயை சேர்ந்த மீனவர் ஒருவர், டைனோசர் போன்ற தோற்றம் கொண்ட மீனை இதற்கு முன்பு பிடித்தார். அந்த வீடியோவும் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

அவுஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுத் தீ-மூவர் உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுத் தீயில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். குயின்ஸ்லாந்து மற்றும் வேல்ஸின் தென் பிராந்தியத்தில் மூன்றாவது நாளாகவும் காட்டுத் ...

%d bloggers like this: